புனேவில் ஓடும் டெம்போவில் வைத்து இரவு முழுவதும் கதற கதற கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 11-ம் தேதியன்று தனது கணவனிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். எங்கு செல்வது தெரியாமல் திணறினார். இதனையடுத்து, இரவு 11 மணியளவில் அந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்ற போது டெம்போ வந்தது. அந்த டெம்போவை கைகாட்டி நிறுத்திய அந்த பெண் தனது வீட்டு முகவரியை கூறி அங்கு தன்னை விட்டுவிடுமாறு பயந்தபடி பணிவுடன் கேட்டுள்ளார். பின்னர், டெம்போவில் இருந்த டிரைவரும், கிளீனரும் அந்த பெண்ணை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.

ஆனால், பெண் குறிப்பிட்ட முகவரிக்கு டெம்போவை ஓட்டிச் செல்லாத அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். அந்த ஓடும் டெம்போவில் மிரட்டி இரவு முழுவதும் அந்த பெண்ணை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை விரைவு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானம் அருகில் கீழே இறக்கி விட்டுவிட்டு ஓட்டுநரும், கிளீனரும் டெம்போவை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக உடனே காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் சம்பவம் ஆலந்தி பகுதியில் நடந்தது என்பதால் ஆலந்தி போலீஸ் நிலையத்துக்கு புகாரை அனுப்பி வைத்தனர். ஆலந்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பெண் இரவு முழுவதும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.