வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொசவன்புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காஞ்சனா . முருகேசன் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் வீட்டுக்கு மீட்டரில் ரீடிங் எடுக்க வரும் மின்சார வாரிய  ஊழியர் ஒருவர், வீட்டில் காஞ்சனா தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, தவறாக நடக்க முயன்றுள்ளார்

அத்துமீறி வீடுபுகுந்து காஞ்சனாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். மேலும் இரு குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால், மின் இணைப்பைத் துண்டித்துவிடுவதாக மிரட்டடியுளள்ளார்.  கடந்த 5 மாதங்களாக அந்த மின் ஊழியர் தொல்லைகொடுகத்து வந்துள்ளார்.

இதையடுத்து காஞ்சனா வீட்டுக்கு மின்வாரியம் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து . பி.கே.புரம் மின்வாரியப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று கேட்டதற்கு, ‘டோர் லாக்’ கட்டணமாக 2,375 ரூபாய் செலுத்த வேண்டும் என்றுகூறி, அங்குள்ள ஊழியர்கள் காஞ்சனாவைப் பார்த்து ஏளனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சனா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.