Asianet News TamilAsianet News Tamil

விராட் கோஹ்லியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்... பாகிஸ்தானுடன் தோல்வி எதிரொலி..!

விராட் கோஹ்லியின் 9 மாத மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Rape threats to Viral Kohli's 9-month-old daughter: DCW chief notice to Delhi Police
Author
Delhi, First Published Nov 2, 2021, 3:05 PM IST

9 மாத சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டிய அனைவரையும் கைது செய்யுங்கள் என்று  மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறியுள்ளார். இன்று தில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால்,  விராட் கோஹ்லியின் 9 மாத மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.Rape threats to Viral Kohli's 9-month-old daughter: DCW chief notice to Delhi Police

"விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு ட்விட்டரில் பலாத்கார மிரட்டல் விடுத்த விதம் மிகவும் வெட்கக்கேடானது. இந்த இந்திய அணி எங்களை ஆயிரக்கணக்கான முறை பெருமைப்படுத்தியுள்ளது, ஒரே ஒரு தோல்வியில் ஏன் இந்த முட்டாள்தனம்?"என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அந்த நோட்டீஸில், இது மிகவும் தீவிரமான விஷயம் மற்றும் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று மாலிவால் கூறினார். "9 மாத சிறுமியை கற்பழிப்பதாக மிரட்டிய அனைவரையும் கைது செய்யுங்கள்" என்று மாலிவால் கூறினார்.Rape threats to Viral Kohli's 9-month-old daughter: DCW chief notice to Delhi Police

எப்ஐஆரின் நகல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் விரிவான நடவடிக்கை அறிக்கையை நவம்பர் 8 ஆம் தேதிக்குள் தங்களுக்கு வழங்குமாறு சைபர் செல் கிளை துணை ஆணையரிடம் அவர் கேட்டுக் கொண்டார். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தப்போட்டியில் பாகிஸ்டாலிடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டனர். பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வெறுப்பை உமிழ்ந்தனர். எல்லை மீறிச் சென்று கருத்துக்களை பகிர்ந்தனர். 

2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, தனது மதத்தின் காரணமாக கடுமையான ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆதரவாக கோஹ்லி சமீபத்தில் முன்வந்து கருத்து தெரிவித்தார். டீம் இந்தியா கேப்டன் ஷமிக்கு ஆதரவாக நின்ற பிறகு அனுஷ்கா ஷர்மாவின் மகள் வாமிகாவுக்கு மிரட்டல் விடுத்து சிலர் தங்கள் வஞ்சத்தை தீர்த்து கொண்டனர். "என்னைப் பொறுத்தவரை, ஒருவரின் மதத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகவும் பரிதாபமான விஷயம்" என்று கோஹ்லி கூறினார்.Rape threats to Viral Kohli's 9-month-old daughter: DCW chief notice to Delhi Police

"ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் அவர்களின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில், நான் ஒருபோதும், ஒருவரை அவர்களின் மதத்தின் மீது பாகுபாடு காட்ட நினைத்ததில்லை. அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் தனிப்பட்ட மற்றும் புனிதமான விஷயம். அங்கேயே விடப்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

தனிநபர்களாக நாம் என்ன செய்கிறோம், களத்தில் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது பற்றி அவர்களுக்குப் புரியாததால், மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் கோஹ்லி கூறியிருந்தார். இதனை அடுத்து கோஹ்லியை அவமதிக்கும் வகையில் அவரது 9 மாத குழந்தை குறித்தும் அவதூறாக பலர் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios