கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் நிர்மலா தேவி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா தேவிக்கும், சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996 ஆம் ஆண்டு  திருமணம் ஆனது. அவர்களுக்கு 2 பெண்  குழந்தைகள் உள்ளனர். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நிர்மலாவுக்கும், சரவணபாண்டியனுக்கும் இடையே இணக்கமான தாம்பத்யம் இல்லை. இந்நிலையில் சரவண பாண்டியன் வேலைக்காக வெளிநாடு  சென்றுள்ளார். அப்போது நிர்மலா தேவி குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த போது உறவினர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகளுடன் அருப்புக்கோட்டை வந்த நிர்மலாவுக்கு, அவரது கணவரின் முயற்சியால் தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியை பணி கிடைத்தது.

கடந்த  2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக  நிர்மலா தேவி சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவருடன் பழக்கம் ஏற்பட்டு உல்லாசம் அனுபவித்தாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு சரவண பாண்டியன், வெளிநாட்டில்  இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், தேவாங்கர்  கல்லூரியின் முன்னாள் செயலாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர் அவ்வப்போது பணம் கொடுத்து உதவியுள்ளார்..

இதைத் தொடர்ந்து தனது கணவரின் நண்பர்கள் இருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். இதை அறிந்த கணவர் நிர்மலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரடைந்த நிர்மலா தேவி , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்து, 24 நாட்கள் பல இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு அருப்புக்கோட்டை திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர மற்றுமொரு  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நகைக்கடை அதிபர் ஆகியருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகுதான் கடந்த 2016-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி விஷயமாக சென்றுள்ளார். அப்போது அங்கு அலுவலகத்தில் இருந்த ஒரு அதிகாரியுடன் மிக நெருக்கமாக பழகியதாக தெரிவித்துள்ளார்.  அப்போது கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்ற நிர்மலா தேவிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அருப்புக்கோட்யைச் சேர்ந்த எஸ்பிகே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியரிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு நிர்மலா தேவி வீட்டில் இரண்டு முறை உல்லாசமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மூலமாக நண்பரானவர்தான் தற்போது சிறையில் இருக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர் முருகன். அவரிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த தொடர்பு அருப்புக்கோட்டை வரை நீண்டுள்ளது. ஒரு முறை அருப்புக்கோட்டை வந்த  முருகனும், நிர்மலா தேவியும் அவரது வீட்டில் உடலுறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காமராசர் பல்கலைக் கழகத்தில்  புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தபோது, முருகனின் நண்பர், கருப்பசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது, அவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி என்பதால் பயிற்சி  முடிந்தவுடன் நானும் உங்களுடன் வருகிறேன் என கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாலை இருவரும் காரில் அருப்புக்கோட்டை சென்றுள்ளனர். அப்போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே இருவரும் உல்லாசம் அனுபவித்தாக நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதன் பிறகுதான் விஐவிக்களுக்கு மாணவிகளை சப்ளை செய்வது  தொடர்பாக முருகன், கருப்பசாமி மற்றும் நிர்மலாதேவி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. ஆனால் இறுதியில் மூவரும் மாட்டிக் கொண்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.