சென்னையில் ஆட்டையை போட்ட திருடனிடமிருந்து திருடிய போலீஸாரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போலிஸிடம் மாட்டிய திருடனிடம் இருந்து இரண்டு ஏடிஎம் கார்டுகளை ஒரு பெண்போலிஸ் திருடி அதில் இருந்து பணத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து தங்க நகைகளை வழிப்பறி செய்யும் கேரளாவைச் சேர்ந்த சாஹூல் ஹமிது என்பவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 15 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹமீதைக் கைது செய்த குழுவில் ரயில்வே போலிஸ் கயல்விழியும் ஒருவர்.

கைது செய்யப்பட்ட ஹமீது இப்போது சிறையில் இருக்க அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது இரண்டு ஏடிஎம் கார்டுகள் குறைந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது கயல்விழி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மந்தப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் 2.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட அது குறித்து காவல்துறைய்யினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார்டுகளில் இருந்து பணம் எடுத்தது காவல்துறையை சேர்ந்த கயல்விழி என்பது தெரிய வந்தது. விசாரணையில் குற்றத்தைக் கயல்விழி ஒத்துக்கொள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வேத்துறை முயற்சித்து வருகின்றனர்.