தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரக்கோரி அங்குள்ள அரசியல்வாதி  ஒருவரிடம் 40 ஆயிரம் மற்றும் 8 பவுன் நகையை கொடுத்துள்ளார். 

வேலை தொடர்பாக அந்தப் பெண்ணும், அந்த அரசியல்வாதியும் அடிக்கடி சந்தித்துப் பேசியதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெல்லை, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு விடுதிகளில் இருவரும் ஒன்றாக நாள் கணக்கில் தங்கும் அளவுக்கு அவர்கள் உறவு நீடித்தது. 

ஆனால் அந்த அரசியல் புள்ளி வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணம், நகையை திருப்பித் தருமாறு அந்தப் பெண் அடிக்கடி கேட்டதால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மல்லிகா அரசியல்  பிரமுகர் மீது வைகுண்டம் சப்.டிவிஷனுக்கு உட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகார் அங்குள்ள எஸ்ஐயிடம் விசாணைக்கு சென்றது. பணம் கொடுத்து ஏமாற்றிய முக்கிய பிரமுகரை அழைத்து விசாரித்த எஸ்ஐ, புகார் கொடுத்த பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசினார். 

அந்தப் பெண்ணை வசீகர வார்த்தைகளால் மயக்கிய எஸ்ஐ, அவருடன் ஊர் ஊராக சுற்றினார். கடந்த 3 நாட்களுக்கு  முன்பு அந்தப் பெண்ணை திருச்செந்தூரில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சிறப்பு பிரிவு போலீசார் எஸ்பிக்கு தகவல் அளித்தனர். ஆனால் திருச்செந்தூர் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அந்த விடுதிக்கு செல்வதற்குள் அந்த எஸ்ஐ, பெண்ணுடன் அங்கிருந்து தப்பினார். 

ஆனாலும் அவ்விடுதியில எஸ்ஐ தனது பெயர், முகவரியை குறிப்பிட்டே ரூம் புக் செய்த ஆதாரத்தை, செல்போனில் போட்டோ எடுத்து, ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் தூத்துக்குடி எஸ்.பி.க்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து தூத்துக்குடி எஸ்.பி., அருண்பாலகோபாலன், அந்த எஸ்ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.