சென்னை வேப்பேரியில் வசித்து வருபவர் பானுரேகா. இவருக்கும் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் சிறுவயது முதலே நட்பு இருந்துள்ளது.  கடந்த 1993 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் கல்லோரியில் பொறியாளர் பட்டம் பெற்ற பானுரேகா, அப்போது காவலர் தேர்ச்சி பெற்றிருந்த பிரபாகரனை தனது பெற்றோர் சம்மதத்துடன் திருவொற்றியூர் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.  

ஒரு வருடம் அமைதியாக  பிரபாகரனுடன் வாழ்ந்து  வந்த பானுரேகா மாற்று சாதியை சேர்ந்த பிரபாகரனின் பெற்றோர் மிராட்டலுக்கு பயந்து பிரபாகரனை பிரிந்து தனது குடும்பத்துடன் பெரம்பூரில் குடியேறியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் 1995ஆம் ஆண்டு பானுரேகாவின் பெற்றோர் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு பானுரேகாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.  அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்ததும் ஸ்ரீவாசனை தொடர்பு கொண்ட பிரபாகரன் சட்டப்படி தனக்கும் பானரேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது என்று தெரிவிக்க , ஸ்ரீனிவாசன் பானுரேகாவை பிரிந்து சென்று விடுகிறார்.   

பின்னர் மீண்டும் 2000வது ஆண்டு விருதுநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பானுரேகாவின் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு அவரை திருமணம் செய்கிறார். அவருக்கும் பானுரேகாவிற்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் பிரபாகரன் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் முறுகந்தமும் பானுரேகாவை பிரிந்து சென்று விட, பெங்களூருவில் குழந்தைகளுடன்  குடியேறிய பானுரேகா, அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியில் சேர்ந்து வாழ்க்கையை நடத்தியுள்ளார். 

மீண்டும் தனது உறவினர் திருமணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபாகரனை சந்திக்கிறார் பானுரேகா. அப்போது  பிரபாகரன் பானுரேகாவுடன் சேர்ந்து வாழ ஆசிப்படுவதாக கூறி பானுரேகாவை சம்மதிக்க வைத்து விடுகிறார். தனது பெங்களூர் பணியை துறந்து  இரு பிள்ளைகளுடன், பிரபாகரனோடு கீழ்ப்பாக்கத்தில் வாழ்க்கையை தொடங்கிய பானுரேகாவின் வருவாயை பிரபாகரன் தனது தேவைகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய பானுரேகா பணம் இல்லாத நேரத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையை பிரபாகரன் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தகாக பானுரேகாவிற்கு தெரியவர, அதன் பின்னர் கடும் தாக்குதலுக்கு ஆளான பானுரேகா பிரபாகரன் மீது புகார் அளிக்க துணை ஆணையர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு பிரபாகரன் மீது ஏற்கனவே 5 பெண்கள் புகார் அளித்திருந்தது பானு ரேகாவிற்கு தெரிய வந்துள்ளது. மேலும் பிரபாகரன் தன்னையும் தனது குழந்திகளையும் மிரட்டுவதாகவும் தெரிவித்த பானுரேகா இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பானுரேகா, பணத்தை குறிக்கோளாக கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் கைவிடப்பட்ட, வசதியான பெண்களை தந்து வலையில் விழாவைப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் குற்றம் சாட்டினார்.