தமிழகத்தில் இளம் பெண்களுக்கு காமக்கொடூரர்களால் நடக்கும் அசம்பாவிதம், அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம் மறையாத போது, நாளுக்கு நாள் அதிரவைக்கும் சம்பவம் அரங்கேறுகிறது. 

காமக்கொடூரர்களிடமிருந்து போலீசார் எவ்வளவோ சிரமப்பட்டு பெண்களை பாதுகாக்கின்றனர். ஆனால், வேலியே பயிரை மேயும் கதையாக, போலீசார் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தும், காமக்கொடூரர்களாக மாறுவதும் என பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
 
நெல்லை மாவட்டத்தில் சுரண்டை என்னும் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு மூன்று காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்து வந்த அவலம் வெளியாகியுள்ளது.

அந்த பெண் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். அந்த பெண்ணுக்கு சுரண்டை காவல் நிலையத்தின் காவலர், கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் செக்ஸ் டார்ச்சர்  செய்தது தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லையில் அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி நிர்மலாவுக்கு, சுரண்டை காவல் நிலைய காவலர் முருகேசன், கடந்த ஒரு வருடமாக செல்போனில் மூலம் ஆபாச வார்த்தைகளால் செக்ஸ் டார்ச்சர் செய்தும், நேரிலும் செக்ஸ் தொடர்பாக அழைத்தும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவி  கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததால், உடனே காவலர் முருகேசனும் அவருக்கு உதவியாக இருந்த  காவலர் கண்ணன் ஆகிய இருவரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகு 2 காவலர்களும், மற்றொரு பெண் காவலரான சரஸ்வதியும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த விஷயம் தெரிந்ததும் எஸ்.பி அருண் சக்திகுமார் மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.