கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி செக்ஸ் விவகாரத்துக்கு விசிட்டிங் கார்டு தேவையில்லை. அத்தனை பேரும் அறிந்த அதிபயங்கரம்தான் அது. எனவே நேரடியாக விஷயத்தினுள் நுழைவோம். 

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவான இந்த வழக்கு, அதன் வீரியத்தைப் பார்த்துவிட்டு ஸ்டேஷன் கையிலிருந்து எடுத்து கோயமுத்தூர் எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி கொடுத்த எஸ்.பி. ‘இந்த செக்ஸ் விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பில்லை.’ என்றார். ஆனால் அம்மா பேரவையின் 34வது வார்டு செயலாளர் பார் நாகராஜ் கைதாகி, கட்சியிலிருந்தே தூக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எஸ்.பி. மீது பாய்ந்தனர் எதிர்கட்சிகள். 

இதனால் இந்த வழக்கு தமிழக சட்டஒழுங்கு காவல்துறையிடமிருந்து தூக்கி சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு தரப்பட்டது. எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக செம ஆக்‌ஷனில் இருக்கிறது அந்த டீம். முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரி ஆகியோரின் வீடுகளில் அதிரடி ரெய்டு, விசாரணை என்று சூழல் போய்க் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.யின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கை சி.பி.ஐ. கையிலெடுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பிலும், புகார்தாரரான ’இளம்பெண்ணின் பெயர்’ வெளிப்படையாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் இது பெரும் விவகாரமாக எழுந்துள்ளது. மேலும் சில நடைமுறைகளை முடிக்க வேண்டி இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்னமும் முறைப்படி சார்ஜ் எடுக்கவில்லை இந்த வழக்கில். இந்நிலையில் சி.பி.ஐ. உள்ளே நுழைய இருப்பது தெரிந்தும் கூட கொஞ்சமும் சுணங்காமல், தன் வேலையை ஜரூராக பார்த்துக் கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. டீம். 

இது ஒருபுறமிருக்க, இந்த பெரும் அராஜக செக்ஸ் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய நான்கு பேர் மீதும் மிகப்பெரிய கடுப்பில் இருக்கின்றனர் மக்கள். பொள்ளாச்சி, கோயமுத்தூர் மக்கள் மட்டுமில்லாது உலக தமிழர்களும், தமிழ் புரியாவிடினும் இந்த விவகாரத்தை புரிந்து கொள்ள முடிந்த மாற்று மொழி மனிதர்கள் கூட கொதித்துக் கிடக்கின்றனர். 

இது தேர்தல் நேரத்தில் அரசியல் ரீதியாகவும் பெரும் விளைவுகளை, குறிப்பிட்ட கட்சிகளுக்கு பின்னடைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவும், இனி இது போன்ற செக்ஸ் வக்கிரங்களில் ஈடுபட எவனுக்கும் பயம் வர வேண்டும் எனும் நோக்கிலும் அதிகபட்ச தண்டைனையான, மரண தண்டனையை கொடுத்துவிடும் முடிவை நிர்வாகத்தின் தலைமை பீடத்துக்கு சில முக்கிய வல்லுநர்கள் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்களாம். ‘சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கிறதுக்கு முன்னாடி முக்கியமான ரெண்டு பேரின் கதையை முடிச்சுடுறது நல்லது. மக்களின் ஆத்திரமும் அடங்கும்.’ என்று தகவல் போயிருக்கிறதாம். 

இதையொட்டி, தமிழக போலீஸின் சில துப்பாக்கிகள் இந்த நால்வரில் சிலர் மீது கண் வைக்க துவங்கிவிட்டன! என்று தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. நால்வரில் யரைப் போட்டுத் தள்ளுவது? என்று போலீஸ் சீட்டு குலுக்கிப் போட்டாலும் தப்பேயில்லை. ’அந்த சீட்டை எடுக்க பாதிக்கப்பட்ட அந்த முக்கியமான பொண்ணை  அழைச்சுட்டு வரலாம்! பாவம் அந்த சகோதரி, இது மூலமா அவங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும்.’ என்கின்றனர் ஆத்திரத்தின் உச்சத்திலிருக்கும் போலீஸார். என்கவுண்ட்டர் போதாது! அதுக்கும் மேலே எதையாச்சும் செய்யுங்க ஆபீஸர்.