Asianet News TamilAsianet News Tamil

டிக்கட் எடுக்க சொன்ன கண்டக்டர் மூஞ்சில் பூரான் விட்ட போலீஸ்!! பஸ்ஸில் வைத்து சட்டையில்லாமல் வெளு வெளுன்னு வெளுத்த சம்பவம்...

பேருந்தில் ஏறிய ஆயுதப்படை போலீஸ் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டரை செம்ம காட்டு காட்டியுள்ள சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

Police fight and Centipedes on conductor face
Author
Chennai, First Published Jun 3, 2019, 2:22 PM IST

பேருந்தில் ஏறிய ஆயுதப்படை போலீஸ் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டரை செம்ம காட்டு காட்டியுள்ள சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு  பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பஸ் நிலையத்தில் சென்னை செல்வதற்காக அரசு சொகுசு பேருந்து ஒன்று அதற்கான இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து  திருவண்ணாமலையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே கண்டக்டர் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு இறங்கிவிடுவார். இடையில் எங்கும் நிற்காமல் பஸ் விரைவாக செல்வதால் பேருந்தில் பயணிகள் முழுவதுமாக இருந்தனர்.

பயணிகளுக்கு வடிவழகன் என்ற கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது பஸ்சில் திருக்கோவிலூரை சேர்ந்த ரகோத்தமன் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் சீருடையின்றி சாதாரண உடையில் இருந்துள்ளார்.

செம்ம போதையில் இருந்த அவரிடம் கண்டக்டர் வடிவழகன் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது ரகோத்தமன் நான் போலீஸ்காரர், எனக்கு பஸ் பாஸ் உள்ளது என சொன்னாராம். அதற்கு கண்டக்டர் வடிவழகன், இது கண்டக்டர் இல்லா பஸ், இதில் டிக்கெட் எடுத்தால் மட்டுமே பயணிக்க முடியும். பஸ்பாஸ் உள்ளவர்களை இதில் அனுமதிக்க முடியாது. இதனால் நீங்கள் வேற  பஸ்சில் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த போலீஸ்காரர் ரகோத்தமன் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரகோத்தமன் திடீரென வடிவழகனை தாக்கினார். இந்த தாக்குதலில் வடிவழகனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் சேர்ந்து போலீஸ்காரர் ரகோத்தமனை பிடித்து பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சட்டையை கிழித்துவிட்டு அமர வைத்தனர்.

மேலும் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரகோத்தமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பஸ்களை எடுக்கமாட்டோம் என்று அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை அங்கேயே நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரகோத்தமனை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios