வேளச்சேரி, பேபி நகரில் உள்ள மசாஜ் சென்டரில்,  பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்தனர். இருவரையும், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இரு பெண்களை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர்.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல், மசாஜ் சென்டரில் மற்றும் முக்கிய பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்பில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவது நடந்து வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து தொழிலை அமோகமாக நடத்தி வருவதும் போலீசே அதற்கு உதவுவதும் அம்பலமாகியுள்ளது.

சென்னை வேளச்சேரி பேபி நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக வேளச்சேரி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.  இதையடுத்து, போலீசார் நேற்று மாலை அந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அந்த சென்டரில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பிரவீன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதிப்படுத்திய போலீஸ் இந்த மசாஜ் சென்டரை திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது, மசாஜ் சென்டர் நடத்திய வேலுாரைச் சேர்ந்த பிரவீன், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தியா, ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், இவர்கள் வெளிமாநில அழகிகளை வரவழைத்தும், வாடிக்கையாளர்களுக்கு பெண்களை சப்லை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.