நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கற்பழிப்பு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் எதுக்கு சண்டை போடணும், எதுக்கு மற்றவர்களை தாக்க வேண்டும் என்பதற்கு விதிமுறையே இல்லாமல் போய் விட்டது. சாதாரண மனித வாழ்கையில் உயிர் பலி வாங்குவது தான் தீர்வா என சிந்திக்கும் அளவிற்கு தான் செல்கிறது.

 

இன்றைய கால கட்டத்தில் ஆங்காங்கு நடக்கும் வெறிச்செயல். இதற்கு உதாரணமாக, தற்போது திண்டுக்கல் அருகே உள்ள அதிகாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நடராஜ் என்பவருக்கும் சம்பள பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜ் மிகுந்த கோபத்தில் இருந்து உள்ளார். 

எப்போது சரியான நேரம் கிடைக்கும அவரை பழி வாங்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த நடராஜ், செல்வராஜ் தனியாக எப்போது  மாட்டுவாரோ என எதிர்பார்த்து இருந்துள்ளார். இந்நிலையில் அன்றாடம் வேலைக்கு செல்வது போலவே அன்றைய தினம் செல்வராஜும், வேளைக்கு சென்று உள்ளார். இதனை கண்ட நடராஜ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கொண்டு செல்வராஜை வெட்டி உள்ளார். 

கழுத்து முதல் மார்பு பகுதி வரை ஒரே வெட்டு வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராஜை  சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் உயிர் இழந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.