சென்னை பெரம்பூரில் கல்லூரி  மாணவியை வீட்டுற்கு அழைத்து  அவருடன் உடலுறவில் ஈடுபட முயன்ற தொழிலதிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சென்னை அடுத்த பெரம்பூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சாமுவேல், தொழிலதிபரான இவர் தேவாலயத்திற்கு அடிக்கடி செல்வதால் அங்கு  வின்சென்ட் என்ற தொழிலதிபருடன் நட்பு ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் இருவரும் நீண்டதநாள் நண்பர்களாக இருந்து வந்தனர்.  இந்தநிலையில்  வின்சென்ட்  மகள் (வசந்தி)  (பெயர்மாற்றப்பட்டுள்ளது) வயது 20 செங்கல்பட்டு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பிடிஎஸ் படித்து வருகிறார்.  சாமுவேலின் மகன் ஜோஸ் வயது 35 என்பவர் தனியாக பிஸினஸ் செய்து வருகிறார். இந்நிலையில்  வசந்திக்கு போன் செய்த ஜோஸ்,  நம் பெற்றோர்கள் இருவரும் நண்பர்களாக உள்ளனர் எனவே நாமும் நண்பர்களாக இருப்போம் என்று கூறியதுடன். தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன் எனவே இருவரும் தொழில் ரீதியாக டிஸ்கஸ் செய்யலாம் வீட்டிற்கு வா... என்று அழைத்துள்ளார்.  

அவரின் அழைப்பை பலமுறை நிராகரித்து வந்தார் வசந்தி. ஆனால் ஜோஸ் வசந்தியை விடுவதாக தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து  வசந்தியை வீட்டிற்கு அழைத்து கெஞ்சினார். சரி என்னதான் பேசப்போகிறார் பார்த்துவிட்டு வந்துவிடலாமே  என்ற எண்ணத்தில் வசந்தி, ஜேஸ்ஸின் வீட்டிற்கு சென்றார் வசந்தியை வரவேற்று  உபசரித்த ஜோஸ்,  வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு  வீட்டின் கதவடைத்துதன்னுடன் உடலுறவில் ஈடுபட வற்புறுத்தினார். 

ஜோஸ்ஸின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்து செய்வதறாயாது திகைத்த வசந்தி  எப்போடியோ ஒருவிதமாக சமாளித்து நான் உங்களை காதலிக்கிறேன், நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அதற்குள் நீங்கள் இப்படி அவசரப்படுகிறீர்களே  இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று   ஜோஸ்ஸை சமாதானம் செய்து அவரிடமிருந்து தப்பித்துள்ளார். 

வீட்டிற்கு சென்ற தனது தந்தை வின்செட்டிடம் ஜோஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முறச்சி செய்த தை கூறினார்.  பின்னர் வின்சென்ட்  மாதவரம் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறி ஜோஸ்மீது புகார் அளித்தார் அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோஸ்ஸை கைது செய்து விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.  ஆனால் தனக்கு திருமாணதானதை மறைத்து கல்லூரி மாணவிகளை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவர்களுடன்   செக்ஸ் வைத்து ஏமாற்றிவந்தது தெரிய வந்தது