பொள்ளாச்சியில் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு  நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த பாலியல் பலாத்கார விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வெளியான அந்த அதிரவைக்கும் வீடியோவில்  "அண்ணா.. பெல்ட்டால என்னை அடிக்காதீங்கன்னா.. " என்று அந்த இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் குரல் கல்நெஞ்சம் கொண்டவர்களையும் நிலைகுலைய வைத்துவிடும். அந்த இளம்பெண்ணின் கதறல் அனைவரையும் உலுக்கி எடுத்தது. இந்த கொடூர க்ரைம்மை சர்வசாதாரணமாக நடத்திய கும்பலை கைது செய்து, அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெருவில் இறங்கி நாடெங்கும் போராடினர். 

நாடுமுழுவதும் வலுத்த குரலால் திருநாவுக்கரசு கும்பலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமான பார் நாகராஜன் கைது செய்யப்பட்ட அன்றே ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கும்  சிபிஐ கைக்கு மாறியது

இந்த கொடூரம் மறைவதற்குள் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயை இழந்து தந்தை பராமரிப்பில் வளர்ந்த இளம் பெண், பொள்ளாச்சியில் தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு பொள்ளாச்சி, குமரன் நகரை சேர்ந்த அமானுல்லா என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி, அமானுல்லா வீட்டிற்கு சென்ற மாணவியை அமானுல்லாவும் அவரது நண்பர்கள் 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவியின் உறவினர்கள், போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஐந்து பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் மேலும் யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் கோவை மாவட்ட எஸ்.பி விசாரித்து வருகிறார்.