Asianet News TamilAsianet News Tamil

நித்யானந்தாவின் நள்ளிரவு டார்ச்சர்கள்... புட்டுப்புட்டு வைக்கும் பெண் உதவியாளர்..!

 எங்களின் பெற்றோரை தரக்குறைவாக திட்டுவதோடு, எங்களுக்கு உடல் ரீதியாகவும் டார்ச்சர் தருவார்கள். பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுப்பார்

Nithyananda's midnight torches ... pudding girl assistant
Author
Tamil Nadu, First Published Nov 23, 2019, 4:35 PM IST

கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன் ஷர்மாவின் நான்கு மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆசிரம கிளையில் நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை பார்க்க பெற்றோரை அங்கு அனுமதிக்கவில்லை என்றும் அகமதாபாத் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜனார்தன் ஷர்மாவின் 4 மகள்களில் மேஜர் வயதை எட்டாத இருவரை மீட்டனர். மற்ற இருவர் தங்களின் பெற்றோரை குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டனர்.Nithyananda's midnight torches ... pudding girl assistant

இந்த வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர். நித்தியானந்தாவை விசாரிக்க முயன்றபோது, அவரது ஆசிரமக் கிளைகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மேலும் விசாரிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே நித்தியானந்தா வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

பெங்களூரு நீதிமன்றத்தில் சீடர் ஒருவர் தொடுத்த பாலியல் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குற்றப்பத்திரிகை பெற்றார் நித்தியானந்தா. அதன் பிறகு கடந்த 43 வாய்தாக்களாக அவர் நீதிமன்றம் செல்லவில்லை என்கிறார்கள், இந்த வழக்கை அறிந்தவர்கள். எனினும் நித்தியானந்தா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, வழக்கு விசாரணையை தொடர்கிறார்கள்.

Nithyananda's midnight torches ... pudding girl assistant

அவ்வப்போது வீடியோவில் தோன்றி உரையாற்றி சமூக வலைதளங்களில் வெளியிடும் நித்தியானந்தா, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக குஜராத் போலீஸார் விசாரணையை விரிவாக்கியபோது, ஈகுவேடார் நாட்டில் நித்தியானந்தா தஞ்சம் புகுந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.

பசிபிக் கடலையொட்டி, தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு ஈகுவேடார். இங்கு நித்தியானந்தாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தயவில் அங்கு நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

எனவே நித்தியானந்தாவை விசாரணைக்கு கொண்டு வர, வெளியுறவுத் துறை உதவியை நாடியிருக்கிறது குஜராத் போலீஸ். இதற்கிடையே இமயமலை பகுதியில் இருப்பதாக நித்தியானந்தா கடந்த 21-ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோ இமயமலைப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றே குஜராத் போலீஸ் நம்புகிறது.

Nithyananda's midnight torches ... pudding girl assistant

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் போன 2018-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாகவும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு தப்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் நித்யானந்தா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.


இந்நிலையில்  நித்யானந்தாவின் முன்னாள் உதவியாளர் ஜனார்த்தன ஷர்மா,  ’’ஆரம்பத்தில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம் ஆசிரம வாழ்வு மிகவும் மகிழ்ச்யிக இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டு முதலாக எங்களுக்கு பலவித டார்ச்சர் கொடுக்க தொடங்கினர். எங்களை நித்யானந்தா பேரிலும், அவரது ஆசிரமத்தின் பேரிலும் நன்கொடை பெற்று தரச் சொல்லி நிர்வாகம் தரப்பு மிரட்ட தொடங்கியது. 

நன்கொடை என்றால் வெறும் சில ஆயிரம் ரூபாயில் அல்ல, லட்சக்கணக்கில் ஒவ்வொருவரும் வாங்கித் தர வேண்டும். இல்லை எனில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கித் தர வேண்டும். இதற்காக, அடிக்கடி எங்களை நள்ளிரவில் கூட உறங்கவிடாமல் அலங்காரம் செய்து, நகைகளை அணிவித்து, நித்யானந்தாவிற்காக புரோமோஷன் வீடியோவில் நடிக்கச் சொல்லி மிரட்டுவார்கள். இதைச் செய்ய மறுத்தால் எங்களின் பெற்றோரை தரக்குறைவாக திட்டுவதோடு, எங்களுக்கு உடல் ரீதியாகவும் டார்ச்சர் தருவார்கள். பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுப்பார்!,'' எனக் குறிப்பிட்டுள்ளார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios