உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிதூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவிகள் சாலையில் செல்லும்போது நயீம் கான் என்கிற இளைஞர் பாட்டுப்பாடி கிண்டலடித்து மாணவிகளிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார். 

 

இந்நிலையில் ஏற்கெனவே அப்பகுதிகளில் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக புகார் வந்த நிலையில் ஆண்டி- ரோமியோ படையை சேர்ந்த ஷாஞ்சால் ஷாவுராசியா என்கிற பெண் காவலர் அங்கு சோதனையிட்டு வந்தார்.  அதன்படி அங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் சிலர் ஈடுபட்டனர். அப்போது சிலர் மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டு காவலர்கள், அவர்களை பிடிக்க முயன்றனர். 

அதில் சிக்கிய ஒரு நயீத்கானை பிடித்த அந்த பெண் காவலர் வீதியில் வைத்து செருப்பால் அடித்து தர்ம அடி கொடுத்தார்.  பின்னர் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிகளை கிண்டல் செய்த இளைஞரை நடுரோட்டில் வைத்து செருப்பால் துவைத்து எடுத்த பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.