புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்.. பால்வண்டி டிரைவராக இருந்து வருகிறார். மேலும் வீடு, வீடாக சென்று பால் வழங்குவதும் வழக்கம். இவர் முதலியார்பேட்டை பகுதியில் பால் சப்ளை செய்து வந்தார். இந்த பகுதியை சேர்ந்த  உமா என்ற 9-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அலெக்சுக்கு பழக்கம் ஏற்பட்டது. 14 வயதான அந்த மாணவியின் பெற்றோர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை.

எனவே மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருப்பார். இந்த நேரத்தில் அலெக்ஸ் மாணவியை சந்தித்து பேசி வந்தார். அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் அவர் உல்லாசம் அனுபவித்தார்.

அப்போது அதை  செல்போனில் படம் பிடித்தார். மேலும் இந்த படத்தை காட்டி தொடர்ந்து உமாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.  அந்த மாணவி வீட்டில் தனியாக இருப்பதையும், அலெக்ஸ் அடிக்கடி வீட்டுக்கு வருவதையும் பக்கத்து வீட்டினர் பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி மாணவியின் தாயாரிடம் சொன்னார்கள்.


நேற்று அதேபோல அலெக்ஸ் மாணவியை சந்திக்க வீட்டுக்கு வந்தார். இதுபற்றி அவரது தாயாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் வந்து பார்த்தபோது இருவரும் வீட்டுக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர்.
.
உடனே  உமாவின் தாயார் கூச்சலிட்டார். இதையடுத்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அலெக்சை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் (போக்சோ) படி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அலெக்சுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.