இன்று காலைமுதலே முகநூல்,வாட்ஸ் அப் வட்டாரங்களில் அதிக பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர் வ.ஐ.ச.ஜெயபாலன். வைரமுத்துவுக்கு அடுத்தபடியாக இவரது பெயர் விரைவில் வைரலாக இருக்கிறது என்கிறார்கள்.

ஈழத்துக்கவிஞரான இவர் ‘சூரியனோடு பேசுதல்’ (1986), ’நமக்கென்றொரு புல்வெளி(1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987), ஒரு அகதியின் பாடல் (1991), வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்’  போன்ற கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.

பின்னர் இவரது கவிதைகளால் பெரிதும் கவரப்பட்ட  இயக்குநர் வெற்றிமாறனால் ‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்சினிமாவின் முக்கிய குணச்சித்திர நடிகளில் ஒருவராக உயர்வு பெற்றார் ஜெயபாலன்.

ஆனால் முதல் படத்திலிருந்தே கவிஞர் ஜெயபாலன் மேல் அரசல்புரசலாக பாலியல் புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. வற்புறுத்தலுக்கு ஒப்புக்கொள்ளாதவர்களிடம் காலில்விழுந்து கரெக்ட் பண்ணும் டெக்னிக் ஒன்று இவரிடம் பிரசித்தம். ‘காரியம்’ ஓகே ஆகும் வரை சம்பந்தப்பட்ட பெண்ணின் காலைபிடித்தபடி ‘ஒரு கவிஞனுக்கு இதுகூட பண்ணமாட்டியா’ என்று கண்ணீர் வடிப்பாராம்.

METOO’ பஞ்சாயத்துகள் களைகட்டியுள்ள நிலையில், இவரால் பாதிக்கப்பட்ட பலர், ‘நீ முதல்ல சொல்லு’ என்று என்று சிறிது தயக்கம் காட்டிவருகிறார்களாம். அப்படி யாராவது ஒருவர் முன்வரும் பட்சத்தில் தாத்தா மீது புகார் கொடுப்பவர்களின் பட்டியல் மிக நீளமாக இருக்குமாம்.

இன்னொரு பக்கம், முகநூலில் உள்ள பெண் கவிஞர்களில் பலர், ஏற்கனவே எழுதிவைத்த ஒரே கவிதையை பெயரை மட்டும் மாற்றி எல்லோருக்கும் காதல் கவிதை அனுப்பும் இவரது  காமநெடிக் கூத்தை  நக்கலடித்து வருகிறார்கள்.