நாகர்கோவிலில் இயங்கிய மசாஜ் சென்டருக்கு விஐபிக்கள், மற்றும் காவல் துறையில் உள்ளவர்கள் ரெகுலராக வந்து சென்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளது.  

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இயங்கும் ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஏஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்குள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதையும் படிங்க;-  அதிமுகவில் 25 பேர் முதல்வர், பொதுச்செயலாளர் கனவில் இருக்கிறார்கள்... ஜெ. உதவியாளரின் ஆதங்கப் பதிவு!

 அதன்படி நேற்று மாலை அதிரடி மசாஜ் சென்டர் நுழைந்தபோது அங்கு மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் இருந்தனர். மேலும் வாலிபர் ஒருவர் இருந்தார். அங்கு விசாரித்தபோது மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாலிபர்களை வரவழைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 இளம்பெண்களை வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த இளம் பெண்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் புதுச்சேரி, திருப்பூர் பகுதி சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது திருப்பூரை சேர்ந்த இளம்பெண்ணை 20 வயதிற்கும், மற்ற இரு பெண்கள் 27 மற்றும் 40 நிரம்பியவர் ஆவர்.

இதையும் படிங்க;- பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய ஜோதிராதித்ய சிந்தியா... குடும்ப கட்சியான பாஜகவில் இணைந்து அசத்தல்..!

 மேலும் பிடிபட்ட வாலிபர் கேரள மாநிலம் இடுக்கி பகுதி சேர்ந்த அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து மசாஜ் செய்வது போல் அவர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருக்க செய்து பணம் வசூலித்துள்ளனர். இதையடுத்து அலெக்சாண்டர் கைது செய்த போலீசார் மீட்கப்பட்ட 3 இளம்பெண்களையும் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்த சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் மீதும், உதவியாக இருந்த ஆனந்தன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்... உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி... ஆத்திரத்தில் கட்டிட மேஸ்திரி விபரீத முடிவு..!

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசாஜ் சென்டர் நாகர்கோவில் மையப் பகுதியில் இருப்பதால் பல முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர் ரகசிய புள்ளிகள் போலீஸ் அதிகாரிகள் இந்த மசாஜ் சென்டர்கள் ரெகுலராக வந்து சென்றுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏசி வசதியுடன் பிரத்யேக அறை மசாஜ் செய்ய உருவாக்கப்பட்டு சொகுசு படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராவில் பதிவு முறைப்படி ஆய்வு செய்தால் யார், யார் வந்து சென்றார்கள் என்பது பற்றி விவரங்கள் தெரிய வரும்.

 இந்த மசாஜ் சென்டரில் பேக்கேஜ் சிஸ்டத்தில் பணல் வசூலித்துள்ளனர். 45 நிமிடத்துக்கு ரூ.1500, ஒரு மணிநேரத்திற்கு ரூ.2000, ஒன்றரை மணி நேரத்துக்கு ரூ.3000 (2 இளம்பெண்கள் மசாஜ் செய்யவார்கள்) 2 மணி நேரத்துக்கு ரூ.3500 (3 இளம்பெண்கள் மசாஜ் செய்யவார்கள்) என்பது தெரியவந்துள்ளது.