நாகையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பாண்டவையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் பிணமாக மிதந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அவர் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டு இருந்தது. 

இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அவர் கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குஞ்சுபிள்ளை என்பவருடைய மனைவி மாரியம்மாள் என்பது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இறந்த சோகம் இல்லாமல் கணவர் பதில் கூறினார். இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 

இதற்கிடையே மனைவி உடலை ஆற்றில் வீசிட்டு தெரியாதது போல் சென்றதும் தெரிய வந்தது. இதனால் குஞ்சுபிள்ளையிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை கொலை செய்ததாக கணவர் ஒப்புக்கொண்டார். மாரியம்மாள் பல ஆண்களுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் குஞ்சுபிள்ளை, மாரியம்மாளிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர் கேட்காமல் வாக்குவாதம் செய்து வந்தார். கடலாகுடியை சேர்ந்த தினேஷ்குமார் (19) என்ற வாலிபர் துணையுடன் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி உடலை பாண்டவையாற்றில் வீசி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கொலைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.