சென்னை கீழ்ப்பாக்கம் அருகே இருக்கும் புல்லாபுரத்தைச் சேர்ந்தவர் கொண்டையா(50). இவரது மனைவி கொண்டம்மா(46). இந்த தம்பதியினருக்கு கிரிபாபு(25), முரளி என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கிரிபாபு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முரளி கீழ்ப்பாக்கம் பகுதியில் கூலிவேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

குடிப்பதற்கு பணம் இல்லாத நேரங்களில் தாய் மற்றும் சகோதரனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவருக்கு அண்மையில் தான் பரிமளா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் கணவனை விட்டு பிரிந்து பரிமளா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாயிடமும் சகோதரனிடமும் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கொடுக்காவிட்டால் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முரளி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது காவல்துறையினர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வீட்டின் மாடியில் ரத்த வெள்ளத்தில் முரளி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் குடிப்பதற்கு பணம் கேட்டு முரளி தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் கிரிபாபு அவரை அடித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கிரிபாபுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது தற்கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read:  'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!