சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே இருக்கிறது உலிபுரம் நரிகரடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனி (63). இவருக்கு அறிவழகன்(45) என்கிற மகன் இருக்கிறார். இவருக்கு அமுதா(40) என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகியிருக்கிறது. இந்த தம்பதியினருக்கு அஜித் (19), ரித்திக் (16) என இரண்டு மகன்கள் உள்ளனர். அறிவழகன், கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல அவர் வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் பழனி, அமுதாவை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட துன்புறுத்தியுள்ளார். ஆனால் அமுதா மறுக்கவே, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த அமுதா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பின் பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!

இதனிடையே மருமகளை வெட்டிக்கொன்றுவிட்டதாக காவல்துறையில் பழனி சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலைக்கு வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதாகி இருக்கும் பழனியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தில், வெகுநாட்களாக தனது மருமகளை அடைய ஆசை கொண்டதாக தெரிவித்திருக்கிறார். வேறு சில ஆண்களுடன் அமுதாவிற்கு பழக்கம் இருப்பதை அறிந்து தன்னுடனும் உறவுகொள்ள பழனி வற்புறுத்தியிக்கிறார். ஆனால் அமுதா மறுக்கவே, ஆத்திரத்தில் அவரை கொலைசெய்ததாக பழனி காவல்துறையில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மருமகளை அடைய துடித்து, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மாமனாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த மார்க்கிஸ்ட் நிர்வாகி..! 5 பேருடன் அதிரடி கைது..!