வெளிநாட்டில் உள்ள கணவரின் நண்பருடன்  உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த ஒரே காரணத்தால் வயசான பாட்டியை  அந்த கள்ளக்காதல் ஜோடி கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஓசரப்பள்ளி காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த நல்லுசாமியின் மனைவி 68 வயதான கண்ணம்மாள் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது மகள் ரேணுகா உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

போலீசார் கண்ணம்மாவை தேடி வந்த நிலையில்,  அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேதப பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனையடுத்து அவர் எப்படி இறந்தார் என்று நடத்திய விசாரணையில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது கண்ணம்மாள் காணாமல் போனது பற்றி, அதே பகுதியை சேர்ந்த திருமால்குமரனின் மனைவி அமுதா  என்பவர் தான், கண்ணம்மாளின் மகள் ரேணுகாவுக்கு முதலில் சொல்லியிருக்கிறார். இதனால் போலீசார் அமுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மழுப்பலாக பதில் சொன்னதால்  சந்தேகத்தால் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண்ணம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், அவரது கள்ளக்காதலனான அந்த பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  அமுதாவின் கணவரும், ஒரு மகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மற்றொரு மகன் மாயமாகிவிட்டார். இதனால் தனியாக இருந்த அமுதாவுக்கும், அவருடைய கணவரின் நண்பரான தமிழ்மாறனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொடர்பால் தினமும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

கொலை செய்வதற்கு ஒரு முன்பு அமுதாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை கண்ணம்மாள் பாட்டி நேரில் பார்த்துவிட்டார். இதனால் தங்களது கள்ளக்காதல் விவகாரத்தை கண்ணம்மாள் ஊர் மக்களிடம்  சொல்லிவிடுவாரோ? என்று பயந்த இருவரும் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் இரவு இருவரும் கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த கண்ணம்மாளின் முகத்தில் முதலில் அமுதா தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க இருவரும் கண்ணம்மாளின் உடலை அங்கிருந்து தூக்கிச் சென்று அந்த பகுதியில் கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் கண்ணம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் நினைத்து விடுவார்கள் என்று எண்ணி இருந்துள்ளனர். அதுமட்டுமல்ல கண்ணம்மாள் மாயமானது குறித்து பக்கத்து ஊரிலுள்ள அவரது மக்களுக்கும் அமுதா தெரிவித்துள்ளார்.  ஆனால் தற்போது தானே வாயை விட்டு மாட்டிக் கொண்டுள்ளார். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.