Asianet News TamilAsianet News Tamil

பாலியல் தொழில் செய்துவந்த பெண்ணுடன் காதல்.. மனைவிக்கு சமாதி கட்ட கணவன் போட்ட பயங்கர பிளான்.

விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த மனைவியை கொலை செய்ய கணவன் முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

.

Love with a woman who was engaged in sex work .. Husband's terrible plan to build a tomb for his wife. T.
Author
Chennai, First Published Sep 28, 2021, 12:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த மனைவியை கொலை செய்ய கணவன் முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டில் பெருமளவில் அதிகரித்துள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கொலைகளுக்கு பின்னணியில் கள்ளக்காதல் விவகாரம் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. இந்த வரிசையில் தொட்டு தாலி கட்டிய மனைவியை கள்ளக்காதலிக்காக கணவன் கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

Love with a woman who was engaged in sex work .. Husband's terrible plan to build a tomb for his wife. T.

டெல்லியைச் 36 வயதுடைய இளைஞர் ஒருவர் 50 ஆயிரம் கொடுத்து சிலதினங்களுக்கு முன்பு இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கலை வாங்கினார். மேலும் சில ஆயுதங்களை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது, இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் பின்தொடர்ந்தனர், பின்னர் அவர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவரிடம் நடத்திய விசாரணை பகீர் தகவல் வெளியானது. அதாவது அந்த இளைஞர் 2006 ஆம் ஆண்டு காதலித்து ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறி அந்த இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விபச்சாரம் செய்யும் பெண் ஒருவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண்ணுடன் தனக்கு காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணை  திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் விரும்பியதாகவும், 

Love with a woman who was engaged in sex work .. Husband's terrible plan to build a tomb for his wife. T.

ஆனால் அதற்கு தனது மனைவி சம்மதிக்காததால் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தான் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கியதாகவும் விசாரணையின் போது அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞரை கொலை முயற்ச்சி , சட்டவிரேத ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 2015ஆம் ஆண்டில் அந்த இளைஞர் மீது சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததது, மற்றும் 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் விபச்சார வழக்கில் அவர் ஏற்கனவே கைதானதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக மனைவியை தீர்த்துக்கட்ட கணவனின்  முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios