உத்தரபிரதேசத்தில் பெண்ணை படுகொலை செய்துவிட்டு குடிபோதையில் பிணத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் அசாம்கரில் உள்ள முபாரக்பூர் பகுதியில் ஒரு வீட்டில் கணவன், மனைவி மற்றும் கை குழந்தை ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு இருந்தன. இது சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த பிறகு அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த கொலை தொடர்பாக நசிருதீன் என்பவன் நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. அதில், அரியானா, டெல்லி மற்றும் மேற்குவங்கத்திலும் இது போன்ற குற்றங்களை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதில், நவம்பர் 24-ம் தேதி போதையில் இருந்த நசிருதீன், சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று, கணவன், மனைவி மற்றும் அருகில் இருந்த 4 மாத குழந்தையை கொன்றுவிட்டு, பெண்ணின் சடலத்துடன் உறவு வைத்துள்ளான். அதன்பின், அந்த பெண்ணின் 10 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.