தந்தைக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக கருதிய ஒருவர் தனது குழந்தை மற்றும் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

.

திருவண்ணாமலை, மாவட்டத்தில் வசிப்பவர் 30 வயதான கார்த்திகேயன். இவரது தந்தை தனபால். கார்த்திகேயனின் மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் மூன்று மாதத்தில் ஓர் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தன் தந்தைக்கும் ராஜேஸ்வரிக்கும் பிறந்தது என கார்த்திகேயன் சந்தேகப்பட்டார். 

இதனால் குழந்தை யாருக்குப் பிறந்தது என அவ்வப்போது மனைவி ராஜேஸ்வரியை கேட்டு கார்த்திகேயன் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தனபால் சமாதானப்படுத்தி வைப்பார். ஒருநாள் குழந்தையை கார்த்திகேயன் கொன்றுவிட்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ராஜேஸ்வரி தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மகன் கார்த்திகேயனை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார் தனபால். 

வீட்டு வாசல் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையை கார்த்திகேயன் கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் தானே காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.