தமிழக பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காங்கிரஸ் தலைவரை போலீசார் கர்நாடகா வரை சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள அம்பலவயல் என்ற இடத்தில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த பெண் தனது கணவருடன் லாட்ஜ் அருகே சாலையில் நடந்து சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சஜிவானந்தன் என்பவர் அந்த பெண்ணை நடு ரோட்டில் வைத்து தாக்கினார். அதை தடுத்த அவரது கணவரும் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

தமிழக தம்பதி தாக்கப்பட்ட சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது தமிழக பெண் தங்கி இருந்த லாட்ஜிக்கு ஏற்கனவே சென்ற சஜிவானந்தன் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் லாட்ஜ் ஓனரான விஜயகுமார் என்பவரும் செக்ஸ் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜ் ஓனர் விஜயகுமாரை கைது செய்திருந்தனர். சஜிவானந்தன் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் வலை வாசித்த தேடி வந்த நிலையில் அப்போது தற்போது கர்நாடக மாநிலம் புதூர் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் பதுங்கியிருக்கும் தகவல் கேரள போலீசாருக்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார் சஜிவானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பல வயல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.