தருமபுரி அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காலியை கட்டிட மேஸ்திரி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி கட்டிட மேஸ்திரி. இவருக்கு நீலா, ரத்தினம், சவுமியா என்று 3 மனைவிகள் உள்ளனர். இதில், 2-வது மனைவியுடன் பழனி பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். 3-வது மனைவியான சவுமியா குழந்தைகளுடன் மாதே மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க;-  63 வயது கிழவியுடன் கள்ளக்காதல்... உல்லாசத்திற்கு தடையாக இருந்த தாய்க்கு நேர்ந்த பகீர் சம்பவம்..!

அப்போது, கட்டிட மேஸ்திரி வேலுச்சாமி (27) என்பவர் மாதேமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது சவுமியாவுக்கும், வேலுச்சாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதேபோல், வழக்கம்போல் கடந்த 4-ம் தேதி கள்ளக்காதலி வீட்டிற்கு வந்த வேலுச்சாமி அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், உல்லாசத்திற்கு வருமாறு வற்புறுத்தியதால் சவுமியா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். தனது ஆசைக்கு இணைங்காததால் வேலுச்சாமி தீக்குச்சியை உரசி சவுமியா மீது போட்டார். உடனே சவுமியா தீ எரிந்த நிலையிலும் வேலுச்சாமியை கட்டிப்பிடித்தார். 

இதையும் படிங்க;- அடிக்கடி உல்லாசம்.. கணவனை கொன்று விட்டு கள்ளக்காதலியை பெண் கேட்டுப்போன கள்ளக்காதலன்.. அதிர்ந்து போன மாமியார்.!

இதனால் 2 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். வேலுச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.