திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுலத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி செல்வி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செல்விக்கு அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலபோக்கில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனையடுத்து,  செல்வி கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று விட்டார். முருகன் ஏற்கனவே திருமணமானவர். மனைவி மற்றொருவருடன் சென்றதால் மனவேதனை அடைந்த கருப்புசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முருகன் செல்வி இருவரும் வாகைக்குளத்திற்கு வந்தனர்.

 நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டு இருந்த செல்வி மற்றும் முருகனை வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் கத்தி மற்றும்  இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக உடனே சிந்துபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வியின் சித்தி மகன் அருண்குமார் மற்றும் இருவரை பிடித்து போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.