பல கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த கணவரை அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (46). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (41) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் மகள் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியிலும்,  மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆசிரியை பிரியாவுக்கு பள்ளியில் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், வாலிபர்கள் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. தனிமையில் இருக்கும் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்த விவகாரம் காலபோக்கில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியை கணவர் கண்டித்துள்ளார். 

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆத்திரமடைந்த மனைவி கணவரை 2 முறை கொலை செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை. இதுதொடர்பாக மனைவி மீது கணவர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை பிரியா அவருக்கு உடந்தையாக இருந்த சக்திவேல், அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற 2 பேரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

இந்நிலையில், போலீசாரிடம் அரசு பள்ளி ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கள்ளத்தொடர்புக்கு எனது கணவர் இடையூறாக இருந்து வந்தார். இதனால் கள்ளக்காதலன் உதவியுடன் அவரை காரை ஏற்றி கொல்ல கடந்த 6-ம் தேதி முயற்சி செய்தேன். அப்போது அவர் உயிர் தப்பிவிட்டார். இதனால் காரிங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், சக்திவேல் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றோம். இதிலும் அவர் உயிர் தப்பி விட்டார் என கூறியுள்ளார். பிரியாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.