திருச்சி அருகே அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் உடன் பிறந்த தம்பியை அண்ணனே கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பிடாரப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகில் உள்ள கம்பிளியம்பட்டியில் தனது அண்ணன் ஜெயராஜ் (35) வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது, கொழுந்தன் அண்ணியுடன் பழகி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உருவானது. அண்ணன் வேலைக்கு சென்ற நேரத்தில் கொழுந்தனுடன் அண்ணி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;-   எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

காலபோக்கில் இந்த விவகாரம் ஜெயராஜிக்கு தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயராஜ் தனது மனைவி மற்றும் தம்பியை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த மனைவி கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், அண்ணியுடன் இருக்கும் கள்ளக்காதலை தம்பி விட மறுத்துவிட்டார். மேலும், தனது தம்பியால்தான் மனைவி கோவித்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அண்ணன் அரிவாளை எடுத்து தம்பியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். 

இதையும் படிங்க;- கட்டிலில் கள்ளக்காதலனுடன் காட்டுத்தனமாக மனைவி உல்லாசம்.. திடீரென வந்த கணவர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை திருச்சி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் ஜெயராஜை தீவிரமாக தேடி வந்தனர். ஜெயராஜ் நேற்று வடமதுரை போலீசில் சரணடைந்தார். அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் உடன் பிறந்த தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.