உத்தரபிரதேச மாநிலம் புலந்ஷா மாவட்டத்தில் வசித்து வந்த 46 வயதுள்ள பெண் ஒருவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குச்சிஜார் என்ற கிராமத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதையடுத்து, அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் அந்த 46 வயது மாமியாருக்கும்  இளைய மகளின் கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு நாள் அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டபோது, மர்மநபர் ஒருவர் மறைந்திருந்து அதனை வீடியோவில் பதிவு செய்தது மட்டுமல்லாமல், அந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுவிட்டார்.


 
இந்நிலையில் மாமியாரின் தங்கை வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்தபோது  அந்த ஆபாச காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மூத்த சகோதரியும் அவரது மருமகனும் பாலியல் உறவுகொண்டதைப் பார்த்து அந்த குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த மாமியார் வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது.  ஆனால் அதற்குள்ளாக இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.