கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதி மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். 

செல்வன் என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதியை கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் முடிந்து 4 நாட்களாகியும் அவரைஎங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். திருமாவளவன் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியும் இதே கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.செந்தில்குமாரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். இப்போது நெட்டிசன்கள் இளமதி எங்கே என்று இணையத்தில் ஹேஷ்டேக்கும் உருவாக்கினர். இதனால் தேசிய அளவில் இளமதி எங்கே என்ற வாசகம் திரும்பி பார்க்க வைத்தது. விவகாரம் பெரிதானதால் இளமதி மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சரவணன் முன்னிலையில் ஆஜரானார்