மதுரை அருகே கணவரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல், அவரின் ஆணுறுப்பில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தவறி விழுந்ததாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியா கைது செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த சுந்தரம்(34). இவா் மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்தாா். இவருக்கு அருள்செல்வம் (32) என்ற மனைவியும், ஜெயஸ்ரீ(5) என்ற பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், சுந்தரம் கட்டிலில் இருந்து விழுந்துவிட்டதாக, அவரது மனைவி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சுந்தரத்தின் உடலில் காயங்கள் இருந்தத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என உறவினர்களிடம் போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கணவரை கொலை செய்து மனைவி நாடகமாடியது அம்பலமானது. 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  சுந்தர், மனைவி அருள்செல்விக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அதேபோல் வெள்ளிக்கிழமை இரவும் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியே கணவரின் ஆணுறுப்பில் தாக்கியதில் சுந்தர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.