திருப்பரங்குன்றம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகரை  சேர்ந்தவர் அசோக் (32). இவரது மனைவி சுதா (27). எட்டு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் சுதா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பணம் வாங்கி தினமும் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- பலான இடத்தில் கை வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியில் வைத்து எட்டி எட்டி உதைத்து செருப்படி கொடுத்த தாய்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுதா வேலை சம்பந்தமாக கணவரிடம் தெரிவிக்காமல் கோயம்புத்தூர் சென்றுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த அசோக் குழந்தைகளை தனது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுதா குழந்தைகளை அழைத்து வரும்படி கூறியுள்ளார். 

இந்நிலையில். நேற்று அசோக் தனியாக வீட்டிற்கு வந்தபோது குழந்தைகள் எங்கே என்று மனைவி சுதா கேட்க கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், கணவன் தன்னுடைய மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டிக்டாக் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகி வந்தது, அசோக்கிற்கு  பிடிக்காததால், மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அசோக் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.