என் பொண்டாட்டி கவுசல்யா மேல எனக்கு இருந்த சந்தேகம், அதனால்தான் கொலை பண்ணி மூட்டை கட்டி கிணத்துக்குள்ளே போட்டுட்டேன் என்று அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கைது செய்யப்பட்ட கணவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல், இவர் மருந்து அடிக்கும் வேலை செய்கிறார், இவரது மனைவி பெயர் கவுசல்யா. கல்யாணம் ஆகி 8 வருடம் ஆன நிலையில் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில், கவுசல்யாவை காணவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சி போலீசில் புகார் அளித்தார் அவரது கணவர்,  அதோடு விடாமல் இன்னொருவருடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வந்தனர். ஆனால் கவுசல்யாவின் கள்ள உறவு பற்றின எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கணவன்-மனைவி இடையே நிறைய தகராறும், சண்டையும் நடந்திருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் புகார் அளித்த கணவன் மீது சந்தேக அடைந்த போலீசார் கைது செய்து துருவி துருவி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.. 

போலீசரிடம் அளித்த வாக்குமூலத்தில்;நான் தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை பார்க்கிறேன். வேலை செய்ற இடத்துலதான் கவுசல்யாவை முதன்முதலா பார்த்தேன். ஒருத்தருக்கொருத்தர் விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் கவுசல்யா நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் வந்தது,  அதனால நான் பலமுறை கண்டிசிச்சேன் கேட்கவேயில்லை. இதை வெச்சே எங்களுக்குள்ள தினமும் சண்டை வரும். 

இப்படித்தான், ஜூலை 26-ம் தேதியும் சண்டை வந்துவிட்டது. அப்போது கவுசல்யா தப்பி ஓட முயன்ற போது, கல்லை தூக்கி தலையிலேயே போட்டேன், துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தாள். அவள் கீழே விழுந்ததும், நான் கழுத்தை பிடிச்சி நெரித்தேன், இதில் உயிர் போய்விட்டது. 

அப்பறம்தான் ஒரு மூட்டை எடுத்து அதில் பிணத்தை கட்டி கிணத்துல போட்டடேன். மாமியார் வீட்டுல வந்து கேட்டதுக்கு நடத்தை சரியில்லைன்னு சொல்லி, நானும் கூட சேர்ந்து அழுதேன். அப்படியே போலீசிலும் புகார் கொடுத்தேன் என்றார்.  இதையடுத்து, பிணத்தை வீசியதாக சொல்லப்பட்ட கிணற்றில் இருந்து கவுசல்யாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். ஒரு மாதம் ஆனதால் அழுகிய நிலையில் சடலம் வெளியே எடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.