‘டிக்டாக்’ செயலிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  ‘டிக்டாக்’ செயலியில் வீடியோ வெளியிட்டதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். 

இன்டர்நெட்டில் வரும் டிக் டாக் வீடியோவால் இன்றைய சமூதாயம் நாளுக்கு நாள்  சீரழிந்து வரும் நிலையில், குடும்ப பெண்களும் இதற்கு அடிமையாகி மீள முடியாமல் தங்களது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றனர். இந்த வீடியோவால் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குளத்துபாளையத்தைச் சேர்ந்த நந்தினி, கனகராஜ் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளன. நந்தினி தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல, கனகராஜ் சென்ட்ரிங் வேலையும் பார்த்து வருகிறார். 

இந்நிலையில், நந்தினி அடிக்கடி போனில் பேசியதாகவும், அவருக்கு வேறொருவருடன் அதனால் அவர் மீது கனகராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி வர்கள் வாழ்க்கை சந்தேகத்தால் சீரழிய, டிக் டாக் வீடியோ மீது நந்தினிக்கு மீது நாட்டம் இருந்ததால், விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் கடுப்பான கனகராஜ்க்கும் அவருக்கும்   இடையே பெரிய கருத்து வேறுபாட்டை உருவாக்கியது.  

இருவரும் விலகி இருந்தாலும் அடிக்கடி நேரிலும் தொலைபேசியிலும் நந்தினியிடம் கனகராஜ் சண்டை போட்டுக்கொள்வார்களாம், இந்நிலையில் வழக்கம் போல நந்தினிக்கு போன் செய்த கனகராஜ், பலமுறை முயற்சித்தும் நந்தினி செல்போன் பிசியாக இருந்தால், கடுப்பான அவர், நந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கனகராஜை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மனைவியை கொலை செய்தது குறித்து  வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; நானும் நந்தினியும் 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரிந்து இருந்த சமயத்தில் நான் அவ்வப்போது எனது குழந்தைகளை பார்க்க செல்வேன். அப்போது அவர் என்னை அலட்சியம் செய்து வந்தார். மேலும், டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.  

இதனால் நான் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்தேன். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து  டிக்டாக்'ல் வீடியோ பதிவேற்றம் செய்து வந்தார். நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கும் போது எல்லாம் அழைப்பு பிசியாகவே இருந்தது. 

ஏன் உன்னுடைய போன் எப்போதுமே பிசியாக இருக்கிறது எனக்  கேட்டதற்கும் எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. குழந்தைகளின் நன்மைக்காக நாம்  சேர்ந்து வாழலாம் என்று கூறியும் அவர் பொருட்படுத்தவே இல்லை.

சரி இது பற்றி பேசலாம் என  செல்போனில் பலமுறை அழைத்தேன். ஆனால் 30 நிமிடத்திற்கும் ஆனால் வேறு நபருடன் நந்தினி பேசிக்கொண்டிருந்ததால் அழைப்பு பிசியாகவே இருந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நான் மது குடித்து விட்டு, நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு சென்றேன். அங்கு அவரை தனியாக அழைத்து செல்போனில் பேசியது குறித்து கேட்டதற்கு எதிர்த்துப் பேசினால் அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியை சரமாரியாக குத்தினேன் என இவ்வாறு அவர் கூறினார்.