பெங்களூருவை சேர்ந்த கோபிநாத் அங்கு நிதி நிறுவனர் ஒன்றை நடத்தி வந்தார். அவர் தனது மனைவி மஞ்சுளா, , மகள் சுபாஷினி,  மற்றும் மகன் பார்கவ் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நடத்தி வந்றத நிதி நிறுவனத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார். இன்று பிற்பகலில் விட்டுக்கு வந்த கோபிநாத், தனது மனைவியை போர்வையால் இறுக்கி கொலை  செய்தார். இதையடுத்து 12 வயது மகன் பார்கவ்வையும் கொலை செய்தார்.

இதனை  நேரில் பார்த்த மகள் சுபாஷினி, கோலை செய்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதைப் பார்த்த கோபிநாத், அவரையும் கொலை செய்ய முயற்சித்தார். இதையடுத்து சுபாஷினி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர்  அவரை காப்பாற்றி கோபிநாத்தை போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

போலீஸாரிடம் கோபிநாத் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு 45 வயதாகிறது. நான் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம். என் மனைவி, மகனை கொலை செய்தேன். ஆனால், என் மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்" என்றார்.

போலீஸார் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.