வெளிமாநிலத்திலிருந்து இளம் பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அனுப்பர்பாளையத்தில் ஒரு தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தனர். வஹாக்கத்திற்கு மாறாக புதுசு புதுசா வெளியாட்கள் வந்து செல்வதை பார்த்த அந்த பகுதியை மக்கள் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சிலமணிநேரம் நோட்டமிட்டனர், சில ஆண்களால் வந்து செல்வதுமாக இருந்தது பார்த்து உறுதி செய்துகொண்ட பின் அங்கு இளம் பெண்களையும் வைத்து விபசாரம் செய்த புரோக்கர் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

மேலும், விபசாரத்துக்கு தயாராக இருந்த அழகியை மீட்டு அரசு  காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர் செல்வராஜ், அவரது மனைவி புரோக்கர் ராஜேஸ்வரி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விபசாரம் நடந்த வீட்டு ஓனர் அருள் ஜோதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.