Asianet News Tamil

எத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா..? காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..!

நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 

How many houses do his heirs know ..? Kasi confesses to naked girls
Author
Tamil Nadu, First Published May 27, 2020, 11:24 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பள்ளி, கல்லூரி பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களை தனது வலையில் விழ வைத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதாக நாகர்கோவில் காசி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் சென்னை பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி, அதன் பின் தற்போது 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தன்னிடம் ஏமாந்த 12 இளம் பெண்களின் பெயரை கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த 12 பெண்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் செய்து வருகின்றனர்.

தனது நண்பன் டைசன் ஜினோ பெயரைச் சொல்லி, என்னோடு பழகிய பெண்களை அவனும் மிரட்டினான் என்று கூறியிருக்கிறான் காசி. தான் எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து, தன்னிடம் பழகியவர்களை மிரட்டியதால், காசிக்கு ஜினோ மீது ஆத்திரம் ஏற்பட்டு சண்டை போட்டிருக்கிறான். காசி கைது செய்யப்பட்ட மறுநாளே, தன்னிடமிருந்த ஆபாச புகைப்படங்கள் சிலவற்றை சமூக ஊடகங்களில் ஜினோ வெளியிட்டான். “இதுபோல் உன்னுடைய ஆபாச வீடியோக்களையும் வெளியிடுவேன்..’’என்று டாக்டர் ஒருவருடைய பேரனை மிரட்டியிருக்கிறான். நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவமனை அந்த டாக்டருக்குச் சொந்தமானது. டாக்டரின் பேரன் காசியின் நட்பு வட்டத்தில் இருந்ததால், பிளாக்மெயில் நோக்கத்தோடு அவனை ஆபாச வீடியோவில் சிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து, நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கஸ்டடி விசாரணையின் போது காசியும் டைசன் ஜினோவை கை காட்ட, காக்கிகளிடம் அவன் பிடிபட்டுள்ளான்.

19 வயதே ஆன காசியின் கூட்டாளி டைசன் ஜினோ, ஒருநாள் காவல் விசாரணையில், “காசி எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை. கெட்ட நோக்கத்துடன் நெருங்கி, மிரட்டி பணம் பறிப்பதே அவன் குணம். ‘நோ லவ்! ஒன்லி பிளாக்மெயில்’என்பது தெரிந்ததும், பேஸ்புக் நட்பு, வாட்ஸ்-ஆப் தொடர்பிலிருந்து அந்தப் பெண்கள் அவசரமாக விலகுவார்கள். உடனே, தன்னுடன் பழகிய பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை எனக்கு அனுப்புவான். நான் அவற்றைச் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவேன்.

அவர்கள் அலறியடித்து, யார் நீ? என் போட்டோ உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று கேட்பார்கள். அவர்களிடம் நான் ‘காசிகிட்ட அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கிட்டா உனக்கு நல்லது. அவனை பிளாக் பண்ணக்கூடாது. இல்லைன்னா… உன்னோட ஆபாச போட்டோக்களை, ஒவ்வொண்ணா சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணுவோம். என்று காசி சொல்லித்தந்த மாதிரியே பேசுவேன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது.’ எனக் கூறி இருக்கிறான். 

‘டெஸ்ட் டியூப் குழந்தை’ மருத்துவத்தில் நிபுணரான பெண் டாக்டர், காசியின் அழகில் மயங்கி மிகவும் நெருக்கமானார். அந்த உரிமையில், காசியை பலமுறை ‘ஸ்பெர்ம் டொனேட்’ செய்ய வைத்தார். காசியிடம் அந்த டாக்டரம்மா ‘எத்தனை வீட்ல உன்னோட குழந்தை வளருது தெரியுமான்னு உசுப்பேற்றி இருக்கிறார். கன்னியாகுமரியில் வசதியான பெண் ஒருவரிடம் பழக்கம் வைத்திருந்தான் காசி. அவளது வீட்டுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்டேட் அதிபரின் மகளை அழைத்துச் சென்றான். கல்லூரி மாணவியான அவள், காசியை தீவிரமாக காதலித்தாள். இவனோ, அந்த வீட்டில் வைத்து அவளை பலாத்காரம் செய்தான்.

இந்நிலையில் ,  நாகர்கோவில் காசிக்கு இரண்டு நண்பர்கள் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்னொரு நண்பர் தான் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் போலீசார் முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios