சேலம் சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா,  புரட்சி கரசோ‌ஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக உள்ள இவர் சேலம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த மனுவில் எனது கணவர் இறந்து விட்டதால் நானும் எனது மகனும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். நான் சங்கர்நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.

நான் தங்கியுள்ள வீட்டு ஓனர் மகன் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பலரிடம் வாங்கி வந்த இருடியம் பொருட்களை வைத்து பூஜை செய்வதாக சொல்லி அடையாளம் தெரியாத பல ஆட்கள் இங்கு வந்து செளக்கின்றனர்.

இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த குடும்ப பெண்களை இருடியம் பூஜைக்கு வரவழைத்து அவர்களை நிர்வாணப்படுத்தி பூஜையும் செய்து வந்தார். இதனை தனது உறவினர்கள் மூலம் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, மீண்டும் பூஜைக்கு அந்த குடும்ப பெண்கள் வரவில்லை என்றால் செல்போனில் உள்ள வீடியோவை காட்டி மிரட்டி வருகிறார்கள். அந்த பெண்கள் இதற்கு பயந்து தன்னுடைய கணவர்களிடம் சொல்லாமல் வீட்டை காலி 
செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் மாதிரியே என்னையும் இந்த நிர்வாண பூஜைக்கு வர கட்டாயப்படுத்தினார்.  நான் மறுத்ததால் அவர்களுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல் வாங்கி தருமாறு கேட்டதால் அதனை வாங்கி கொடுத்தேன். தற்போது அந்த ஆவணங்கள் பெறுவதற்கு ரூ. 1 லட்சம் உன்னிடம் கொடுத்தேன் என்று உன்னை அசிங்கப்படுத்துவேன், அவமானப்படுத்துவேன், போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டுகிறார்.

மேலும், அப்பாவி பெண்களை இருடியம் பூஜைக்கு வரவில்லை என்றால் போட்டோவை காட்டி மிரட்டுவதும், செல்போனில் படம் பிடித்ததை பேஸ்புக்கில் வைரலாகி பரவ விடுவேன், கடன் வாங்கியதாக மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த இருடியம் பூஜைக்கு நான் ஒத்து வராததால் ஆவணங்களை வாங்க அவர் என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன் என்று அப்பட்டமாக பொய் சொல்லி வருகிறார்.

இது போன்ற செயலில் ஈடுபடும் போலி சாமியார்களிடம் இருந்து என்னைப்போன்ற அப்பாவி பெண்களை மீட்டு விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்