தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை காதலன் கத்தியால் சரமாரியாக குத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 19 வயது நிறைந்த பெண் ஒருவர் காதலனால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .  தானே மாவட்டத்தில் வாடோல் கிராமத்தில் வசிப்பவர் இந்தப்பெண் .  அதே பகுதியை சேர்ந்த விஷால் காதே என்ற  இளைஞரை காதலித்து வந்தார் . 

 

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் , அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை வேறொரு  இளைஞருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர் இந்நிலையில் அந்த இளைஞருடன் அம்பர்நாத் நகரில் வசிக்கும் அந்த பெண் தன் வீட்டு கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார் .  உயிருக்குயிராய் காதலித்த காதலி  தன்னை ஏமாற்றி  விட்டாரே என்ற கோபத்தில் கத்தியுடன் நின்றிருந்தார்  காதலன் விஷால் காதே ,  அந்தப் பெண்ணை  தன்னுடன் வரும்படி தகராறு செய்துள்ளார் .  ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது  . அதில்  ஆத்திரமடைந்த காதலன் விஷால் காதே,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார் . 

இதைக் கண்ட அவரது கணவர் விஷாலை தடுக்க முயன்றார் .  அப்போது கணவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது .  இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர் .  இதைக்கண்ட காதலன் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினார் .  உடனே கணவன் மனைவியை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .  ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ள அந்தப் பெண்,  தன்னை முன்னாள் காதலன் கத்தியால் குத்தியதையும்,  தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த  காரணத்தால் அவர் இப்படி நடந்து கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார் .  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய காதலனை தேடி வருகின்றனர் .