கேரள மாநிலம் கொல்லம் அருகே 17 வயது சிறுமி, கடந்த நவம்பர் 9ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். 

அதற்கு அடுத்தநாள் திருவனந்தபுரம் பகுதியில் தவித்ததாக உறவினர் ஒருவர், சிறுமியை அழைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அதன்பின் சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் கவுன்சிலிங் அழைத்து சென்றனர். அங்கு சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது, 30 வயதுள்ள லினட் என்ற உறவுப்பெண் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை சிறுமியிடம் காண்பித்து, இணையதளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார். 

இதில் பயந்த சிறுமியை கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு கூட்டிச்சென்ற லினட், வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

சிறுமியின் நிலையை கேட்டு அதிர்ந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லினட் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.