இளம் பெண்ணுக்கு சரக்கு கொடுத்து, போதையில் கதறக் கதற கற்பழித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்களின் செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருப்பதால் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பெண்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

பொள்ளாச்சியில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, கற்பழித்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பல பெண்களை சீரழித்த அதிபயங்கர சம்பவம் நாட்டையே குலுக்கிய நிலையில் தொடர்ந்து அதே போன்ற பல சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. 

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் சாந்தி, கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாத்தாவை உடன் இருந்து கவனித்து வந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாக இருவரும் போனில் பேசி வந்த நிலையில், சாந்தியை திருமணம் செய்து கொள்வதாக நைம் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த வாரம் சேலம் வந்த சாந்தி, ஏற்காடு, குரும்பப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நைம் மாலிக்குடன் சென்று வந்துள்ளார். அன்று மாலை, அரிசிப்பாளையத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். சாந்திக்கு குளிர்பானத்தில் சரக்கை கலந்து கொடுத்த நைம் மாலிக், மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என 3 பேரும் சேர்ந்து சாந்தியை மயக்க நிலையில் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் கதறிய சாந்தி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டிய அவர்கள், சாந்தியின் ஏடிஎம் கார்டில் இருந்து 17 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சாந்தி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் மகளிர் போலீசார், நைம் மாலிக், அவரது நண்பர்களான 4 ரோடு காமராஜ் காலனியைச் சேர்ந்த நபீஸ், பெரமனூரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட வாலிபர்கள், இதேபோல் வேறு பெண்களிடம் நடந்துள்ளனரா? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து ஸ்மாட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், இளம்பெண்களை பலாத்காரம் செய்தும், உல்லாசம் அனுபவிப்பதும் என ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து பல பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? என விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.