Asianet News TamilAsianet News Tamil

போதை தெளிய வைக்கவே கிணற்றில் தள்ளினார்களாம்... நண்பன் பரபரப்பு வாக்குமூலம்!!

மது போதையில் இருந்த மவீன் னை போதையை தெளிய வைக்கவே கிணற்றில் தள்ளிவிட்டதாக  கைது செய்யப்பட்ட நண்பர் அருண்குமார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நண்பனை குடிபோதையில் கிணற்றில் தள்ளி கொலை.  ஒருவர் கைது ஐந்துபோருக்கு காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் பகுதி சேர்ந்தவர் மவீன் இவர் பெங்களூரு கார்பெண்டர் வேலை செய்து வருகிறார்.  

நேற்று முன் தினம் பெங்களூரு பகுதியில் இருந்து தனது சொந்த கிராமமான வாணியம்பாடி அருகே விடுமுறையை கழிக்க ஊருக்கு வந்த விடுமுறையில் வந்து உள்ளார். அவரது சக நண்பர்களான சுதர்சன்,பவித்,ராகுல், கல்யாணகுமார், அருண்குமார்,அஜீத் குமார் ஆகியோருடன் சேர்ந்து குள்ளிக்க சென்றள்ளார். அப்போது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். 

இதை மவீன் வின் செல்போனில் வீடியோ எடுத்த சக நண்பர்கள் குடிபோதயில் இருந்த மவீனை கிணற்றில் தள்ளிவிட்டு விளையடி உள்ளனார். கிணற்றில் தள்ளிவிட பட்ட மவின் நீரில் மூழ்கி இறந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மவீனின் செல்போனை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளனர். இரவு நேரம் ஆகியும் மவீன் வீட்டுக்கு வராததால் அவரின் தாயார் சுகுணா மற்றும் தந்தை மகி ஆகியோர் குளிக்க சென்ற நண்பர்களிடம்   விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் சொல்ல மறுத்தால் மவீன் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தள்ளனர். 

இந்நிலையில் அதே பகுதியில் மிஸ்ரிலால் என்பவருக்கு சொந்தமான் கிணற்று அருகே மவீன் செல் போனை கண்டு பிடித்த உறவினர்கள். அந்த போனை சோதணை செய்த போது அதில் இருந்த வீடியோவை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்,காவல்துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. வாணியம்பாடி காவல் துறையினர் மற்றும் தீயனைப்புதுறை நீண்ட நேரம் போராடி உடலை கிணற்றில் இருந்து மிட்டனர். 

பின்னர் அவரது நண்பர் அருண்குமார் மட்டும் கைது செய்துள்ளனர். மேலும், 5பேர் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கூடா நட்பு குடியால் உயிருக்கு கேடாய் முடிந்ததாக அப்பகுதிமக்கள் கூறி சோகத்தில் உள்ளனர். இது குறித்து கைது செய்யப்பட்ட அருண்குமார், மது போதையில் இருந்த மவீன் னை போதையை தெளிய வைக்கவே கிணற்றில் தள்ளிவிட்டதாக சொல்லியிருக்கிறார். ஆனால், தள்ளிவிட்டதையும் மறந்துவிட்டு வீட்டிற்கு சென்றதாக கூறியிருக்கிறார். 

Video Top Stories