பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக அதிமுக நிர்வாகி மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகள் ஆனிலதா (33).  தற்போது நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்கும், சுசீந்திரம் அக்கறை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நான் உடல்நிலை சரியில்லாத எனது அத்தையை பார்க்க நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இதையும் படிங்க;- தலைக்கு ஏறிய காமவெறி... எச்ஐவி பாதித்த இளம்பெண்ணை ஓடும் ரயில் மாறி மாறி பலாத்காரம் செய்த இருவர்..!

இந்நிலையில், திருமணத்துக்கு முன்பு மீன் குத்தகை, டாஸ்மாக் பார் ஏலம் எடுப்பதற்காக தன்னிடம் பணத்தையும், நகைகளையும் வாங்கி கொண்டார். இதனையடுத்து, திருமணமான முதல் நாளில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இதுதொடர்பாக கணவரிடம் கேட்டபோது என்னை கடுமையாக அடித்து உதைத்தார். இருப்பினும் கணவருடன் சகித்து வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் பூதப்பாண்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்து கருக்கலைப்பு வரை சென்றிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க;- அமைச்சரை ஜெயலலிதா ஆன்மா சத்தியமா சும்மா விடாது... சாபம்விடும் அதிமுக எம்.எல்.ஏ..!

இது குறித்து கணவரின் பெற்றோரிடம் கேட்டபோது ஏற்கனவே உனக்கு தெரியும் என நாங்கள் நினைத்தோம் என்று தெனாவட்டாக பதிலளித்தனர். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பிரச்சனை விஸ்ரூபம் எடுத்ததையடுத்து எனது கணவர் தாக்கியதால் கைமுறி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். இது எல்லாம் போக தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.