ஆத்தூரை சேர்ந்தவர் சரவணன். இவர் கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

 இவருக்கும் இவரது மனைவிக்கு அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மூத்த மகள் தந்தையிடமும், இளைய மகள் தாயிடமும் வளர்ந்து வந்தனர். 

சரவணுக்கு குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் தன்னிலை மறந்த சரவணன் தனது  மகளை கட்டயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் இது குறித்து தனது  தாயிடம் தெரிவிக்க , உடனடியாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து சரவணன் தலைமறைவானார். போலீஸார் அவனை தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் சரவணன் மனைவி பிரிந்த பிறகு வேறு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.