ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை அலங்காநல்லூர் அருகே நடராஜன் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் பைனான்ஸ்  தொழில் செய்து வந்தார்.இவரக்கு இரண்டு மனைவிகள். தனது இரண்டாவது மனைவி அபிராமியுடன் வாழ்ந்து வந்தார்.

இவர் கடந்த 31-ந் தேதி மதியம் வீட்டு முன்பு அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டடிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர்  கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது இளங்கோவனை அவரது மனைவி  அபிராமியே கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அபிராமி அளித்த வாக்குமூலத்தில், இளங்கோவன், தனது 2-வது மனைவி அபிராமியின் மகளான அனுசுயாவுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அபிராமியும் கண்டித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அனுசுயாவை வேறு ஒரு இடத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும்  இளங்கோவன் மகளை திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்குச் சென்று , அனுசுயாவுக்கு செக்ஸ் தொந்தரவு  செய்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அபிராமி, அனுசுயாவுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றது தெரிவந்தது.

இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் போலீசார் அபிராமி மற்றும்  அனுசுயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளங்கோவனை கொன்ற கூலிப்படையினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.