ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்காவை கற்பழித்து,  எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இன்று என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் குடும்பத்தினரும் மிகுந்த துக்கத்தில் உள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட  சென்னகேசவலுக்கு  20 வயதே ஆகிறது. அவரது மனைவி ரேணுகாவுக்கு 17 வயது தான் ஆகிறது. கடந்த 6 மாதங்களூக்கு முன்புதான் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. 

சுட்டக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த ரேணுகா, என்னையும் எனது கணவரைக் கொன்ற இடத்துக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடுங்கள். அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது. நானும் சாக விரும்புகிறேன்” என கதறி அழுதுள்ளார்..

மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து எனது கணவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். உண்மையில் அவர் குற்றம் செய்திருந்தால், நீதிமன்றம் தண்டிக்கட்டும். நானும் ஒரு பெண் தான்” என்றும் ரேணுகா தெரிவித்தார்.

அடுத்து  சிவாவின் தந்தை ராஜப்பா, இந்த உலகம் எனது மகன் குற்றம் செய்ததாகப் பேசுகிறது. இந்த நால்வரில் ஒருவர்தான்  அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.  ஆனால் இப்போது எனது மகனுக்கும் தண்டனை கிடைத்துள்ளது”  வருத்தத்துடன் தெரிவவித்துள்ளார்.

நவீனின்  தந்தை எல்லப்பா, “இது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலை. எனது மகனைச் சந்திக்கவும் அவருடன் பேசவும் காவல்துறை எங்களை அனுமதிக்கவில்லை. சட்ட நடைமுறைகளை முடிப்பதற்கு முன்பே ஏன் அவர்களை தண்டித்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல் முக்கிய குற்றவாளியாக கூறப்படும்,  முகமது ஆரிஃப்பின் தாயார், மகன் இறப்பைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியிலிருந்ததால் யாரிடமும் பேச முடியாத நிலையில் உள்ளார்.