Asianet News TamilAsianet News Tamil

கஸ்தூரியை கற்பழித்து காதலனும் கொலை... கடைசி நேரத்தில் உயிர் தப்பிய காமக்கொடூரன் திவாகரன்..!

தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

double murder case...supremecourt cancelled death sen
Author
Delhi, First Published Apr 16, 2019, 3:39 PM IST

தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. double murder case...supremecourt cancelled death sen

தேனி மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி. இந்த காதல் ஜோடி சுருளி மலை பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு பிணமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர், திவாகரன் (எ) கட்டவெள்ளை அந்த காதல் ஜோடியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. double murder case...supremecourt cancelled death sen

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகரன் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து திவாகரன் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. double murder case...supremecourt cancelled death sen

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் திவாகரனின் தூக்குத் தண்டனையை அதிரடியாக ரத்து செய்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை குற்றவாளி திவாகரனின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், குற்றவாளி தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios